கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த இரண்டு தினங்களாக நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு இரவு அலுவலகம் திரும்பிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து பல்வேறு மாற்று கட்சியினர் தங்களை பாஜக கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வன்னிய சமுதாய நலச்சங்க நிர்வாகி ராஜ்குமார் தலைமையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை கட்சி தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நேரில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களை பாஜக கட்சியில் இணைத்து கொண்டனர்
அனைவரையும் சால்வை அணிவித்து புதியதாக கட்சியில் சேர்ந்தவர்களை அமைச்சர் வரவேற்றார்.