மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஐடிசி நிறுவனம் சார்பில் சி எஸ் ஆர் நிதி உதவி மூலம் சீலியூர் துரைசாமி கவுடர் நினைவு மேல்நிலைப்பள்ளிக்கு சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பில் பெஞ்சுகள் ஸ்கிரீன் போர்ட் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் மற்றும் யுபிஎஸ் ஆகியவற்றை வழங்கினார்கள்.
ஐடிசி ஆலையின் தலைமை நிர்வாகி வெங்கட் ராவ் மனிதவளம் மேம்பாட்டு துறை தலைவர் மகேந்திர பாபு மற்றும் உற்பத்தி துறை தலைவர் முரளி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் வழங்கினார்கள்.
வெள்ளியங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வாட்டர் கூலர்கள் வழங்கப்பட்டது. காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் ஐடிசி நிறுவன தலைமை நிர்வாகி வெங்கட் ராவிடம் பெற்றுக் கொண்டார். கோவை மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி சீலியூர் அரசு மாணவிகள் விடுதி மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மாணவர் விடுதி ஆகியவற்றை ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் . ஐடிசி நிறுவனம் சார்பில் மொத்தம் 25 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட பணிகள் வழங்கப்பட்டன.
முடிவில் ஐடிசி நிறுவன வேளாண் அதிகாரி வீரமணி நன்றி கூறினார்.