பெள்ளேபாளையம் ஊராட்சியில் தலைவர் பிரஸ் குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை என்று கூறி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
உடனடியாக அதிகாரிகளை அழைத்து குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்க வேண்டும் என தலைவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் துணைத்தலைவர் சுரேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது
கூட்டத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டு தங்களது குறைகளை ஊராட்சி மன்ற தலைவரிடம் எடுத்துக் கூறினர்
இதில் பொதுமக்கள் மின்வாரியம் சார்ந்த குறைகளை கடந்த கிராம சபை கூட்டம் முதல் தொடர்ந்து அளித்து வரும் நிலையில் புகாருக்கு தீர்வு காண வேண்டிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூட்டத்திற்கு வராமல் ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கிராமசபை கூட்டத்திற்கு வராத மின்வாரிய அதிகாரியை தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கூறினார்.