fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் அருகே உள்ள சிறு முகை வனச்சரக பகுதியான மூலையூர் பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டிய வனப்பகுதி அமைந்துள்ளது

அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் மூலையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதி யில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை அறிந்த விவசாயிகள்
அது குறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்

பின்னர் அங்கு வந்த வனத் துறையினர் உயிரிழந்த பெண் காட்டு யானைக்கு 5வயது இருக்கும் என தெரிவித்துள்ளனர் தற்போது அது குறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

யானையின் பிரேத பரிசோதனைக்கு பிறகே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img