fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் வீடு, வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி துவக்கம்

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் உள்ள வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது.இந்த பணிகளை வரும் ஏப்.13-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

மக்களவைத்தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்.19 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.இதில் தொகுதிகளில் பூத் ஸ்லிப் வழங்குவதில் குழப்பம் ஏற்படுவதால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பூத் ஸ்லிப் வழங்கக் கூடாது என ஏற்கனவே தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவுறுத்தி இருந்தது.

இதனடிப் படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிக ளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள் பூத் ஸ்லிப் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு,வீடாக சென்று வாக் காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி வருகின்றனர்.பூத் ஸ்லிப் உடன் வாக்காளர் கையேடு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கையேட்டில் வாக்களிப்பது எப்படி? என்பது குறித்த விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலு வலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான குண சேகரன் நேற்று வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.

அப்போது,வட்ட வழங்கல் அலுவலர் சங் கர்லால், நகராட்சி ஊழியர் ஜெயராமன் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img