கேஎம்சிஹெச் சூலூர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் கடந்த 28ம் தேதி பல் லடத்தில் ஒரு மருத்துவக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் அன்றாட மருத்துவ பயிற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு தலைப்பில் கலந்துரையாடப்பட்டது.
இதில் மருத்துவ இயக்குனரும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ராஜவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். இந்நிலையில் கருத்தரங்கைத் துவக்கி வைத்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில்,
“கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களின் நலனை முன்னிட்டு மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் நவீன முன்னேற்றங்களை அவர்கள் அறிந்துகொள்ள இது போன்ற கருத்தரங்குகள் அவர்க ளுக்கு உதவிகரமாக இருக்கும்.
நோயாளிகளுக்கு தரமான மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளை அளிப்பதற்கு மருத்துவர்கள் அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகிறது” என்றார்.
இந்த கருத்தரங்கில் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.