மறைந்த முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள ஈரோடு அரிமா சொசைட்டி அறக்கட்டளையின்
மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமை ஈரோடு மாநகராட்சி மேயர் நாக ரத்தினம் சுப்பிரமணியம் உணவு மற்றும் எழுதுபொருள்களை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை திமுக இலக்கிய அணி செயலாளர் இளையகோபால், துணை தலைவர் மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். கட்சி மாநகர் செயலாளர் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார், பி.கே.பழனிசாமி, ராதா கிருஷ்ணன், அக்னி சந்துரு, பிரகாஷ், வீரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்