fbpx
Homeபிற செய்திகள்அரசுப் பள்ளி மாணவிகள் 79 பேருக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய மலபார் குழுமம்

அரசுப் பள்ளி மாணவிகள் 79 பேருக்கு ரூ.7 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய மலபார் குழுமம்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் சி எஸ் ஆர் நிகழ்ச்சி ராமநாதபுரம் கிளையின் சார்பாக ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தாஹிர் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்.சேகர் (முகமது சதக் தஸ்தாஹிர் மேல் நிலை பள்ளிமுதல்வர்), டாக்டர்.சோமசுந்தரம் (முகமது சதக் தஸ்தாஹிர் ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர்), சுதிர் முகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தெற்கு மண்டல தலைவர்), முகமது சலீல் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ராமநாதபுரம் கிளை இணை தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளை சேர்ந்த 79 மாணவிகளுக்கு குழுமம் சார்பாக மொத்தம் ரூ.7,00,000த்திற்கான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்.

இந்நிலையில் மலபார் குழுமம் லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

படிக்க வேண்டும்

spot_img