fbpx
Homeபிற செய்திகள்சோலூர் பேரூராட்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் குவிந்த 500 மனுக்கள்

சோலூர் பேரூராட்சியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமில் குவிந்த 500 மனுக்கள்

நீலகிரி மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டம் நடந்து வரும் நிலையில், நேற்று சோலூர் பேரூராட்சியில் நடந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டு விண்ணப்பங்களை வழங்கினர்.

கடந்த மாதம் 18ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலும் அன்றைய தினம் மக்க ளுடன் முதல்வர் திட்ட முகாம் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா மற் றும் பந்தலூர் ஆகிய தாலூகாவிற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நகராட்சி மற்றும் பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. 13 துறைகளை ஒரே இடத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் கொண்டு வந்து மனுக்கள் பெறப்படுகிறது.

இந்த முகாம்களில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மனுக்களை வழங்கி வருகின்றனர். இந்த முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும், மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்படும்.

எரிசக்தி துறை மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதிதிராவிடர, பிற் படுத்தப்பட்டோர் நலத் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் சார்பில் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று ஊட்டி அருகேயுள்ள சோலூர் பேரூராட்சிக் குட்பட்ட ஊரட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. இந்த முகாம் ஊட்டி கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் நடந்தது.

சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்சாத், தலைவர் கௌரி, துணைத் தலைவர் பிரகாஷ்குமார், ஊர் தலைவர் ஹாலன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த முகாமில், சோலூர் பேரூராட்சிக் குட்பட்ட கோக்கால், ஊரட்டி, கோட்டட்டி, டென்சாண்டல், தூபக்கண்டி உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.

இந்த முகாமில், சோலூர் பேரூராட்சி தலைமை அலுவலர் மாதவன், கவுன்சிலர்கள், அலுலவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img