fbpx
Homeபிற செய்திகள்'மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் மனுக்களை பெற்ற பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்

‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமில் மனுக்களை பெற்ற பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் குனியமுத்தூர், நரசிம்மபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுக்களை பதிவு செய்யும் ‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு முகாமினை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றபோது எடுத்தபடம்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், நியமன குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் இளஞ்சேகரன், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, பேரூர் வட்டாட்சியர் ஜோதிபாசு, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img