மதுக்கரை வன சரகத்தில் களைச்செடிகளை அகற்றும் பணியை வனத்துறை துவக்கி உள்ளது.
கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனசரகம் நவக்கரை பிரிவு சோளக்கரை சுற்றுப்புற பகுதியிலுள்ள களைச் செடிகளை அகற்றும் திட்டத்தின் கீழ் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் ரயில் இருப்பு பாதை அருகில் உள்ள அந்நிய மற்றும் களைச் செடிகளான சீமை கருவேல மரம் மற்றும் உன்னிச் செடிகள் அகற்றப்பட்டு வருகிறது. அதன் படி 90 ஹெக்டர் சீமை கருவேல மரங்களும், 50 ஹெக்டேர் உன்னி செடிகளும் அகற்றப்பட உள்ளது. அதுமட்டுமின்றி தேவையற்ற களை செடிகளும் அகற்ற ப்படுகின்றன.
இதன் மூலம் வனவிலங்குகள் ரயில்வே இருப்புப்பாதை அருகில் வந்தால் இருப்புப் பாதை காவலர்களுக்கு எளிதாக தெரியும் எனவும் யானைகள் மற்றும் மற்ற வனவிலங்குகளின் நகர்வு தொடர்ச்சியாக கண்காணிக்க எளிதாக இருக்கும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.