fbpx
Homeபிற செய்திகள்காதலை வானில் பறக்கவிட்ட கோவை கலைஞர்

காதலை வானில் பறக்கவிட்ட கோவை கலைஞர்

காதலர் தினத்தை முன்னிட்டு காதல் ஓவிய பட்டத்தை தயாரித்து வானில் பறக்கவிட்டுள்ளார்  கோவையைச் சேர்ந்த யு.எம்.டி ராஜா.

காதலர் தினம் நாளை மறுநாள் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பு கலைஞரான UMT ராஜா “காதல் வானிலே தன்னை மறந்து சிறக்கடிக்கும் காதலர்” எனபதை வலியுறுத்தும் வகையில் பட்டங்களை வடிவமைத்து வானில் பறக்க செய்துள்ளார். 

அதில் “தேடி செல்வதல்ல காதல் நம்மை நாடி வருவதே காதல்” என எடுத்துரைக்கும் வண்ணம் ஒரு பட்டத்தில் ஆண் ஒருவர் அன்பே வா வா! என்பது போலும் பெண் ஒருவர் அசடே போ போ என்பது போன்றும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

முன்னதாக ,யு.எம்.டி.ராஜா கம்ல்ஹாசனை முத்தத்தால் வரைந்து அவரிடம் பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img