fbpx
Homeபிற செய்திகள்கம்பம்மெட்டு மலைச் சாலையில் அரசு பஸ் - லாரி நேருக்கு நேர் மோதல் : 1...

கம்பம்மெட்டு மலைச் சாலையில் அரசு பஸ் – லாரி நேருக்கு நேர் மோதல் : 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு மலைச்சாலையில் பஸ் லாரி மோதியதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது.

கம்பம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் நெடுங்கண்டத்திற்கு இயக்கப்படுகிறது. நேற்று மாலை  நெடுங்கண்டத்திலிருந்து கம்பம் நோக்கி கம்பம்மெட்டு மலைச்சாலையில் வந்தது. அப்போது 10 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது எதிரே கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் கட்டப்பனையை நோக்கி வந்த லாரியும் பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது, இதில்  பஸ் கண்ணாடி மட்டும் உடைந்தது.

மாலை நேரம் நடைபெற்ற விபத்தால்  கம்பம் மெட்டு மலைச் சாலையில்  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  கம்பம் வடக்கு  போலீசார் மற்றும் வனத்துறையினர்  காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img