நாமக்கல் மாவட் டம், எருமப்பட்டி பேரூ ராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மின் மயானம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மின் மயா னம் பொதுமக்களின் பயன் பாட்டிற்காக கொண்டுவரப்பட்டது.
இந்த மயானம் சன் வெல்பர் டிரஸ்ட் மூலம் நிர்வகிப்பதற்காக எருமப் பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்புகளை ஒப்படைத்தார். மேலும் இறந்த உடல்களை எடுத்து வருவதற்கு லயன்ஸ் கிளப் சார்பில் அமரர் ஊர்தியை சன் வெல்பர் டிரஸ்ட்டுக்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஜெயபிரகாஷ், முன் னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, துணைத்தலைவர் ஜே.ஜே. ரவி. எருமப்பட்டி செயல் அலுவலர் (பொறுப்பு) வனிதா, இளநிலை உதவி யாளர் சுரேஷ் ராஜ், மற்றும் வார்டு கவுன்சிலர்கள், சன் வெல்பர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.