fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவமனைக்கு ஏர் கூலர் வழங்கிய லயன்ஸ் சங்கம்

கோவை அரசு மருத்துவமனைக்கு ஏர் கூலர் வழங்கிய லயன்ஸ் சங்கம்

கோவை அரசு மருத்துவமனையில் ஏர் கூலர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் ஆகாஷ் லயன்ஸ் சங்கம் 3242 சி சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் சசிகுமார் தலைமையில் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் குணசேகரன், முன்னாள் தலைவர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து மருத்துவமனை தலைமை செவிலியர் கண்காணிப்பாளர்கள் ப்ரீத்தா, ரங்கநாயகி, ஜானகி, சுதா ஆகியோரிடம் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்டத்தின் ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் லயன் பாஸ்கர், ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் இணைந்து ஏர் கூலர் வழங்கினர்.

இதில் லயன் ஜெய ராம், லயன் பிரபு ராம், சிவில் இன்ஜினியர் மணி கண்டன், ஜெயபிரகாஷ் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் ராதாமணி, தேன்மொழி, சுகந்தி, குரூஸ் மேரி, அமுதவல்லி, பெரிய நாயகி, அமுதரசு முருகப் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img