இண்டகிரிடி லயன்ஸ் சங்கம் நடத்திய லயன்ஸ் இறகுப்பந்து தொடரில் நேரு நகர் லயன்ஸ் சங்கம், இண்டகிரிடி லயன்ஸ் சங்கம், கணபதி டவுன் லயன்ஸ் சங்கம், டைடல் சிட்டி லயன்ஸ் சங்கம், பிளாசம் லயன்ஸ் சங்கம், காளப்பட்டி சிறகுகள் லயன்ஸ் சங்கம், இமயம் லயன்ஸ் சங்கம், பொள் ளாச்சி ப்ரைடு லயன்ஸ் சங்கம், ஹோப்ஸ் லயன்ஸ் சங்கம் ஆகியவை கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் இன்டகிரிடி அரிமா சங்கத்தின் கிருஷ்ணகுமார் – சந்தோஷ் இணை சுழற் கோப்பையை தட்டிச் சென்றது.
50 வயதுக்கு மேற்பட் டோருக்கான போட்டியில் நேரு நகர் இன்டகிரிட்டி இணையர் கிருஷ்ணகுமார் – சுப்பிரமணி வெற்றி பெற்றனர். ஓபன் பிரிவில் இண்டகிரிட்டி இமயம் இணையர் சரவண செல்வம் – அன்பில் வெற்றி பெற்றனர்.வெற்றி பெற்ற லயன்ஸ் அணிகளுக்கு கோப்பைகள் பரிசளிக்கப்பட்டன.
324சி மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் கி.ராஜசேகர், பசிப்பிணி போக்குதல் அமைப்பின் மாவட்ட தலைவர் பி.எஸ்.செல்வராஜ், கூட்டு மாவட்ட பொருளாளர் எஸ்.ராம்குமார், பன் னாட்டு லயன்ஸ் இயக்க முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் ஆர்.என்.கருணாநிதி, முன்னாள் ஆளுநர்கள் டாக்டர் பழனிசாமி, டாக்டர் சாரதா மணி பழனிசாமி, முன்னாள் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.செந்தில் குமார், டைடல் சிட்டி அரிமா சங்கத்தின் ராஜ்மோகன் கனகராஜ், இண்டகிரட்டி அரிமா சங்கத்தின் நந்தகுமார், சித்ரா நந்தகுமார், ரவிசங் கர், கிருஷ்ணகுமார், ஆனந்தகுமார், கணேஷ் ஷா, லாவண்யா ரவிசங்கர், ஸ்ரீமதி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
நேரு நகர் அரிமா சங்க தலைவர் மோகன்ராஜ், முன்னாள் தலைவர் லோகநாதன், சுப்பிரமணி, கணபதி டவுன் அரிமா சங்க தலைவர் மெய்யழகன், இண்டகிரிட்டி அரிமா சங்கத்தின் சீனிவாசன், சந்தோஷ், டைடல்சிட்டி அரிமா சங்கத்தின் செய லாளர் லலித், ராகவன், காளப்பட்டி சிறகுகள் அரி மா சங்க தலைவர் திவாகர், பிளாசம் அரிமா சங்கத் தலைவர் சிவபிரகாசம், பொள்ளாச்சி ப்ரைட் அரிமா சங்க தலைவர் ரமேஷ், பொருளாளர் பூபதி, இமயம் அரிமா சங்கத்தின் சாய், அன்பில் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுக்கோப்பை வழங்கப் பட்டது.