தூத்துக்குடி மாநக ராட்சி லயன்ஸ் டவுன் பகுதியில் தமிழர் திரு நாளை முன்னிட்டு சமத் துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சகாய மாதா ஆலய பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங் கல் பானைகளில் சமத் துவ பொங்கலிட்டு அனைவருக் கும் வழங்கி தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சகாய மாதா ஆலய பங்குத்தந்தை அருட்திரு பிரதீபன் தலைமை தாங்கினார், உதவி பங்கு தந்தை சுசின், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸிலின், தமிழன் கலைக் கூடம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழன் கலைக் கூடம் மாணவர்கள் 100 பேர் கலந்து கொண்ட சிலம்பாட்ட போட்டிகள் மற்றும் பாரம்பரிய வீர விளையாட்டுக்கள் மாஸ்டர் ஜிபி.ராஜா மேற்பார்வையில் நடைபெற்றன. மேலும் கும்மி ஆட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்திரு பிரதீபன் செய்தி யாளரிடம் கூறுகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் கலைகள் மறக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக் குடி மாநகரத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளை யாட்டுக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை சமத்துவ பொங்கல் நாளில் மிகச் சிறப்பாக நடத்திய தமிழன் கலைக்கூடம் மற்றும் சகாய மாதா பங்கு மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நிகழ்ச்சியில் கபில்டன், ஜாப்ரின் செல்வன் மற்றும் பங்கு மக்கள் 300 பேர் விழாவில் கலந்து கொண்டனர்.