மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரம் மற்றும் வார் ரூம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தற்போதே துவக்கி விட்டனர்.
அந்த வகையில் திமுகவில் சட்டத்துறை சம்பந்தமான வார் ரூம் மேட்டுப்பாளையம் கோ – ஆப்பரேட்டிவ் காலனியில் இன்று திறக்கப்பட்டது.
நீலகிரி எம்பி ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
மேலும், தேர்தல் தொடர்பான வழக்குகள் பிரச்சனைகள் சம்பந்தமாக கையாளுவது அங்கு அமைக்கப்பட்டுள்ள கணினிகள் அதனை ஆபரேட்டிங்க் செய்வது குறித்து அப்போது கலந்து ஆலோசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, சட்டத்துறை இணைச் செயலாளர்கள் பி.ஆர்.அருள்மொழி, கே.எஸ்.ரவிச்சந்திரன், சட்டத்துறை துணைச் செயலாளர் கே.ஜே.சரவணன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பத்ரி என்கிற பழனிச்சாமி, துணைத்தலைவர் ரமேஸ்குமார், துணை அமைப்பாளர்கள் வெற்றி, ராஜேஷ்குமார், ஷஃபீக் அகமது, கோகிலா, தங்கவேல், நீதிமன்ற வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செந்தமிழன், தினேஷ்குமார், கனக சுந்தரம், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அஷ்ரப் அலி, டி.ஆர். சண்முகசுந்தரம், ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், நகர செயலாளர்கள் முகமது யூனூஸ், முனுசாமி மற்றும் வழக்கறிஞர் சந்தானகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.