கிரியா பல்கலைக்கழகத்தின் தி ஸ்கூல் ஆஃப் இன்டர்வோவன் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ் (SIAS) 2023-26 கல்வி ஆண் டுக்கான தனது பிஏ (ஹானர்ஸ்) மற்றும் பிஎஸ்சி (ஹானர்ஸ்) இளங்கலை பட்டப்படிப்பு வகுப்பிற்கான சேர்க்கைகளின் முதல் சுற்றை தொடங்கியிருக்கிறது. சேர்க்கைக்கான இந்த முதல் சுற்று செயல்பாடு 2022 டிசம்பர் 5 அன்று முடிவுக்கு வரும்.
இளங்கலை பட்டப் படிப்பிற்கான பள்ளியின் முதல் மாணவர்கள் குழு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் படிப்பை நிறைவு செய்தனர். உலகளவில் தரஅளவுகோலிடப்படும் இந்தியாவின் முதல் முற்போக்கான கல்விப் பல்கலைக்கழகத்தின் வெற்றியையும் மற்றும் கல்வி உலகின் பரவலான அங்கீகாரத்தையும் உணர்த்துவதாக இது அமைந்தது.
கிரியா பல்கலையின் துணை வேந்தர்
கிரியா பல்கலையின் துணை வேந்தர் பேராசிரியர் நிர்மலா ராவ் கூறியத £வது:21-வது நூற்றாண்டுக் கான கல்வியை மறுவரை யறை செய்துஉருவாக்கும் பணியை கிரியா பல்கலையில் உண்மையிலேயே முனைப்புடன் தொடங்கியிருக்கிறோம்.
கிரியா பல்கலையின் வழிமுறை என்பது வெவ்வேறு துறைகளுக்கு ஊடானது என்பதையும் கடந்து, ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. உலகை சூழ்ந்திருக்கிற அதிக சிக்கலான பிரச்சனைகளிலிருந்து, தினசரி எதிர்கொள்கின்ற சவால்கள் வரை, பின்னிப் பிணைந்த செயல்பாட்டின் கண்ணாடிகள் வழியாக இவையனைத்தையும் நாங்கள் பார்க்கின்ற மற் றும் பிணைப்புகளை உரு வாக்குகிறோம்.
உண்மையான கல்வித் தகுதி மற்றும் கல்வித் திறன்களை தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களால் மட்டும் எப்போதும் வெளிக்காட்ட முடியாது என்பதை நாம் புரிந்திருப்போம். எனவே, கல்வி மதிப்பெண்களில் ஒரே முனைப்பை நாங் கள் காட்டுவதில்லை.
அதற்குப் பதில் எங்கள் தெரிவு முறையின் பல்வேறு அம்சங்கள் மூலம் கல்வித் தகுதி மற்றும் திறனை அளவிடுகிறோம். மாணவர்களை அவர்க ளுடைய திறந்த மனப்ப £ன்மை, ஆர்வம், பிரிவு, கூட்டுவேலை, படைப்புத் திறன், தன் விழிப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படை யில் மதிப்பீடு செய்கிறோம்.
ஒரு விண்ணப்பதாரருக்கு இந்தப் பண்புகளை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு போதிய வாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையில், எங்களுடைய சேர்க்கைகளை வடிவ மைத்திருக்கிறோம்.
தகுதி வாய்ந்த மாணவர்கள் இப்பல்கலையில் அவர்களது கல்வி விருப்பங்களை செயல்படுத்த தவறவிடக்கூடாது என்ற நோக்கத்தோடு அவர்களது கனவுகள் நிஜமாவதை உறுதிசெய்ய, அவர்களது முயற்சிகளுக்கு சிறப்பான நிதி ஆதரவையும் நாங்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கிறோம் என்றார்.