பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது விளையாட்டு தின விழா மார்ச் 25ம் தேதி நடந்தது.
விழாவில் தலைமை விருந்தினராக சென்னை சுங்கத்துறை சப்இன்ஸ்பெக்டரும் சர்வதேச வாலிபால் வீரருமான சாஜு பிரகாஷ் எம்.கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், விளையாட்டு வீரருக்கான அரசு வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக நிறுவனம் மேற்கொண்டு வரும் செயல்பாடுகளை பாராட்டினார்.