fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 40 வது ஆண்டு விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி 40 வது ஆண்டு விழா

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40 வது ஆண்டு விழா புதனன்று நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஏபிபி பிராசஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் உலகளாவிய டிஜிட்டல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரான ராஜேஷ் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உலக அளவில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

இந்திய ராணுவத்தின் இஎம்இ படைப்பிரிவு கர்னல் ஆர்.விஸ்வநாதன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

கல்லூரி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசாமி, செயலாளர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவிசங்கர், கல்லூரி தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் முனைவர் வீ.பாலுசாமி கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img