fbpx
Homeபிற செய்திகள்கொங்கு பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

கொங்கு பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் 7 நாள் நாட்டுநலப் பணித்திட்ட சிறப்பு முகாம் கோபி அருகே முருகன்புதூர் மற்றும் பா.வெள்ளாளபாளையம் கிராமங்களில் ஜனவரி 9 வரை நடைபெற்றது.

இம்முகாமின் மூலம் ரூ.2.30 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளி மாணவியருக்கான நவீனகழிப்பறை மற்றும் பல்நோக்கு வகுப்பறைக்கு மின் இணைப்புவசதி, மின்விளக்கு மற்றும் மின்விசிறிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

மேலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் கல்லூரி தாளாளர் வெங்கடாசலம் அறக்கட்டளை நிர்வாகிகள் குமாரசாமி முத்து சாமி சத்தியமூர்த்தி, மு.ஏ.ரவிசங்கர், சச்சிதானந்தன், கல்லூரி முதல் வர்.ஏ.வேதகிரிஈஸ்வரன், கோபி தொடக்கக்கல்வி அலுவலர் திருநாவுக்கரசு கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img