கோவை பிரான்சிஸ்குவின் புனித காணிக்கை அன்னை சகோதரிகள் சபையினரால் பெண்களுக்காக முதன்முதலில் தொடங்கப்பட்டுப் பவளவிழாவினைக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் காப்பாளர்கள் நிர்வகிக்கும் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அமைப்பு சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், சாலையில் செல்வோர் முதலியோருக்காகக் கல்லூரியின் நுழைவாயில் அருகே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன.
சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அங்கத்தினரின் உருவாக்க நடனம் (R.S.P.Formation dance) நடைபெற்றது. மிதவேகம் மிக நன்று, தலைக்கவசம் உயிர்க்கவசம், அலைப்பேசியால் வரும் அல்லல்கள், கல்லூரியின் வாயில் அருகே வாகனங்களை நிறுத்தாமல் வாயிலை விட்டுத் தள்ளி நிறுத்த வேண்டும் என்பன போன்றவற்றைச் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் உறுப்பினர்கள் குறுநாடகம் மூலம் நடித் துக்காட்டி, சாலை விழிப்புணர்வுப்பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோலாட்டம் ஆடி விழிப்புணர்வுச் சிந்தனை களைப் பதிவுசெய்தனர். கோமாளியாட்டம் எனும் நாட்டுப்புற நடனமாடி அனைவரையும் மகிழ்வித்துச் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கினர்.
கல்லூரியின் செயலர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், முதல்வர் அருட் சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அதிகாரியும், தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியருமான ப.மகேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் முதன்மை, தமிழ் நாடு காவல் போக்குவரத்துக் காப்பாளர் இன்ஜினியர் சாம் பாபு, துணை முதன்மை தமிழ்நாடு போக்குவரத்துக் காப்பாளர் ரங்கபிரபு மற்றும் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் கல்விசார் புல முதன்மையர் பொலன்சியா, தேசிய மீள்தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலின் வசந்தி, விலங்கியல் துறைப்பேராசிரியர் ரோஸ்லின், வரலாற்றுத்துறை பேராசிரியர் பிரேமா, சாலைப் பாதுகாப்புச் சுற்றுக் காவல் அமைப்பினர், ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சாலையில் செல்வோர், பெற்றோர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கல்லூரியில் பயிலும் மாணவியர் இந்நிகழ்ச்சியைக் கண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
கல்லூரியின் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் ஒருங்கிணைப்பாளர்களான சிந்தியா, காஞ்சனா, மேரி ஜெர்லின், லிதியால், முனைவர் அருட்சகோதரி வின்சி ஷோபனா, முனைவர் பிரதுஷா, முனைவர் ஏஞ்சல் கிறிஸ்டினா, முனைவர் காயத்ரி, திரிலோகசுந்தரி மற்றும் நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.