fbpx
Homeபிற செய்திகள்கிக்பாக்சிங் குத்துச்சண்டை போட்டி

கிக்பாக்சிங் குத்துச்சண்டை போட்டி

ஈரோடு மாவட்ட அளவிலான கிக்பாக்சிங் குத்துச்சண்டை போட்டி வேள்ளாளர் வித்யாலயா பள்ளியில் நடந்தது.இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கு பள்ளி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், விசிகே மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டிஎன் கிக்பாக்சிங் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் யூசுப் ஏற்பாடுகளை செய்தார்.

நடுவர்கள் சேலம் பிரேம்குமார், கள்ளக்குறிச்சி இஸ்மாயில் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். ஈரோடு ராஜா, மகேந்திரகுமார், சண்முகசுந்தரம், விஜயகுமார், மின்வாரிய உதவி பொறியாளர் சங்கர், பரமேஸ்வரன், நந்தினி, ஷெரீப், ஷேக், கோபி செங்கோட்டையன் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்கள் மே 3,4,5 தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

படிக்க வேண்டும்

spot_img