fbpx
Homeபிற செய்திகள்ரூ.7.99 லட்சம் முதல் புதிய கியா சோனெட் கார் அறிமுகம்

ரூ.7.99 லட்சம் முதல் புதிய கியா சோனெட் கார் அறிமுகம்

இந்தியாவின் முன்னணி பிரீமியம் கார் தயாரிப்பாளரான கியா பிரீமியம் காம் பேக்ட் எஸ்யூவி காரான புதிய சோனெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலை ரூ.7.99 லட்சம். 2023 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சோனெட் 25 பாது காப்பு அம்சங்களைக் கொண் டுள்ளது.

இவற்றில் 10 தானியங்கு அம்சங்களும், 15 வலுவான உயர்ப் பாதுகாப்பு அம்சங்களும் அடங்கும். ‘Find My Car with SVM’அம்சமானது காரின் சுற்றுப்புற காட்சியை வழங்குகிறது.

மேலும் சோனெட்டை மிகவும் வசதியான டிரைவாக மாற்ற ஹிங்கிலிஷ் கட்டளை களை வழங்குகிறது. 5 டீசல் மேனுவல் வேரியன்ட்டுகள் உட்பட 19 வெவ்வேறு வேரியன்ட்டுகளில் கிடைக்கும். பெட்ரோலில் உள்ள ஜிடி லைன் மற்றும் எக்ஸ்-லைன் வேரியன்ட்டுகளின் விலை முறையே ரூ.14.50 லட்சம் மற்றும் 14.69 லட்சம் ஆகும்.

டீசல் வேரியன்ட்-ன் விலை முறையே ரூ.15.50 லட்சம் மற்றும் 15.69 லட்சம் ஆகும். பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை செயல்படுத்தும் வகையில், 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் வாகன நிலைப்புத்தன்மை மேலாண்மை உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை கியா பிரீ மியம் காம்பேக்ட் எஸ்யூவி காரான புதிய சோனெட் கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img