நாட்டிலேயே மருத்துவ நகரமாக கோயமுத்தூர் விளங்குவதாக தெரிவித்த தேசிய அளவிலான ஹெல்த்கேர் வழங்குநர்கள் சங்கம் கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள கே.ஜி. மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பொன்விழாவை முன்னிட்டு, இருதய அறுவை சிகிச்சைக்காக நவீன தொழில்நுட்பத்துடனான ரோபோடிக் இயந்திரம், பொதுமக்களின் பயன் பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
நவீன வசதிகளுடன், இருதய அறுவை சிகிச்சை துல்லியமாக மேற்கொள்ள உதவும், ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திர அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.பக்தவத்சலம், பல்வேறு மருத்துவத் துறையைச் சார்ந்த சிறப்பு விருந்தினர்கள் மகேஷ்வர்மா, கிர்தார் கியானி, மின் பாஜ்பாய் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், புத்தகம் வெளியிடப்பட்டது. கே.ஜி. மருத்துவமனை சார்பாக விருதுகள் வழங்கினர்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய ஹெல்த் கேர் சங்க இயக்குனர் ஜெனரல் கிர்தர் கியானி கூறியதாவது: கே.ஜி. மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, 50 ஆண்டு கோல்டன் ஜூப்ளி விழா பெருமையுடன் இன்று கொண்டாடுகின்றனர்.
சிறந்த சேவை வழங்கி சமூக பொறுப்புடன், டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் இயங்கி வருகின்றனர். அவர்களை இந்த தருணத்தில் நாங்கள் வாழ்த்தி பாராட்டுகி றோம்.
தேசிய அளவில் பார்க்கும்போது கோவை நாட்டின் மருத்துவ நகரமாக பார்க்கின்றோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெட் வசதிகளுடன் பல மருத்துவமனைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மட்டுமே 50% மேற்பட்ட மருத்துவமனைகள் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடனான மருத்துவ கட்டமைப்புடன் இயங்குகின்றது. கோயமுத்தூர் மருத்துவ துறையில், சிறந்த மருத்துவ நகரமாக விளங்குகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் மேற்கத்திய நாடுகளை விட சிறந்த ஹெல்த் கேர் சேவை நடைபெறுவதாக மருத்துவர் பக்தவத்சலம் தெரிவித்தார்.