காவேரி மருத்துவமனை வடபழனி, மிகை வளர்ச்சியுள்ள இதயத்தசை பாதிப்புக்கான (HCM) கிளினிக் தொடங்கப்படுவதை அறிவித்திருக்கிறது. அதிக சிக்கலான இந்த இதய பாதிப்புக்கு சிகிச்சையளிக்க ஒரு முழுமையான அணுகுமுறையை மக்களுக்கு வழங்குவதே இந்த கிளினிக் தொடங்கப்படுவதன் நோக்கமாகும்.
இதயத்தசை பாதிப்பு (ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி) என்பது இதய தசைகள் வழக்கத்திற்கும் மேல் தடிமனாக ஆகின்றன. இது பெரும்பாலும் மரபணு காரணமாக ஏற்படுகிறது. சில நேரங்களில், குறிப்பாக இளவயது நபர்களில் இதய செயலிழப்பால் திடீர் உயிரிழப்பும் ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் சிறப்பான சிகிச்சையை மேற்கொள்வது, நீண்டகால விளைவுகளை தவிர்க்கக்கூடும்.
இது தொடர்பான சேவைகளின் முழு தொகுப்பையும் வழங்கக்கூடிய ஒரு சிறந்த மையமாக எச்.சி.எம் கிளினிக் இயங்கும்.
இது குறித்து காவேரி மருத்துவமனை, இதய செயல்பாட்டு முடக்கம் & மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் தலைவர் டாக்டர் பி.மனோகர் கூறுகையில்,
“எச்.சி.எம் பாதிப்பிற்கு மரபு ரீதியாக ஏற்கனவே இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். மருத்துவம், செயல்முறை மற்றும் அறுவைசிகிச்சை ஆகிய சிகிச்சை முறைகளை இங்கு நாங்கள் வழங்குகிறோம்“ என்றார்.
இதயவியல் பிரிவின் கிளினிக்கல் லீடு டாக்டர். அன்பரசு மோகன்ராஜ் கூறுகையில், “எச்.சி.எம் கிளினிக்கில் பல்வேறு துறைகள்/பிரிவுகள் சார்ந்த கண்ணோட்டத்தின் வழியாக ஒவ்வொரு நோயாளிக்கான பாதிப்பையும் நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். குழு அணுகுமுறையில் இந்த கிளினிக்கில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது” என்றார். காவேரி குழும மருத்துவமனைகளின் இணை-நிறுவனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “எச்.சி.எம் சிகிச்சையின் அனைத்து வழிமுறைகளையும் இந்த கிளினிக் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து வழங்குகிறது. மருத்துவர்கள் கலந்தாலோசனை முதல் மேம்பட்ட மருத்துவச் செயல்முறைகள் வரை தாமதமின்றி பரிந்துரைத்து, அவர்களுக்கு தேவைப்படுகிற அனைத்து சிகிச்சை வழிமுறைகளையும் வழங்குகிறது” என்றார்.



