fbpx
Homeபிற செய்திகள்காட்டுமன்னார் கோவில் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காட்டுமன்னார் கோவில் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி யில், இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கினார். உடற்கல்வி துறை தலைவர் சரவணன் உறுதிமொழி வாசித்தார்.

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்று மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் 30சதவீத மாணவ,மாணவியர்களுக்கு மட்டுமே மேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி தங்கள் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

விழாவில் துறைத் தலைவர்கள் சிற்றரசு, பூபாலன், செந்தில்குமார், தேவநாதன் மற்றும் நூலகர் நடராஜன், பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் 350 மாணவ, மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img