fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 72 விவசாயிகளுக்கு ரூ.1.39 கோடி மானியம்...

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 72 விவசாயிகளுக்கு ரூ.1.39 கோடி மானியம் – ஆட்சியர் தகவல்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், லாலாபேட்டையில் வேளாண் பொறியியல் துறையின் சார்பாக முதலமைச்சரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்புசெட்டுகளின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று (25ம் தேதி) செய்தியாளர் பயணத்தின் போது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சி யர் தங்க வேல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப விவசாயிகள் பயிர்சாகுபடி முறைகளை மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறையின் சார்பாக முதலமைச்சரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மொத்த விலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு 80 சதவீதமும், பொதுப் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த இதர விவசாயிகளுக்கு 70 சதவீதமும், இதர விவசாயி களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் முதலமைச்சரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் மூலம் 72 விவசாயிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் இயந்திர மயமாக்கு தலுக்கான துணை இயக்கத் திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் இயந்திரங்களை தனிப்பட்ட விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்திர வாடகை மையங்களை அமைப் பதற்கும் மானியமாக தனிப்பட்ட இயந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீதமும், ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் பொதுப்பிரிவின் சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதமும், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.8 இலட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வாடகைக்கு வழங்கப்படும் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களுக்கு செல்லாமலே தங்கள் வீடு அல்லது வயல்களிலிருந்தே உழவர் செயலியிலுள்ள‘இ-வாடகை செயலி’ என்னும் தெரிவின் மூலம் அல்லது https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதள முகவரி மூலமும் முன்பதிவு செய்து பயன்பெறலாமென மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் செய்தியா ளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவிபொறியாளர் கலைச் செல்வி, உதவிஇயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img