fbpx
Homeபிற செய்திகள்3,31,582- குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை துவக்கி வைத்த ஆட்சியர்

3,31,582- குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதை துவக்கி வைத்த ஆட்சியர்

கரூர் மாவட்டத்தில் 3,31,582- குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கும் பணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ், நியாய விலை கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடியில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வேஷ்டி,சேலை, ஒரு முழு கரும்பு, ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, இன்று தமிழக முதலமைச்சர் சென்னையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஆச்சிமங்கலத்தில் உள்ள தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில், அரிசி பெரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கரூர் மாநகராட்சி மண் டல பொறுப்பாளர் கனக ராஜ், கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் பிச்சைவேலு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீர ராக்கியம் பகுதியில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணியில் கூட்டுறவு சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கிய நிலையில் திடீரென குடும்ப அட்டைகளை ஸ்கேன் செய்யும் மின் இயந்திரம் பழுதானதால், தொடர்ந்து அவர்கள் பணியை செய்ய முடியாமல் தவித்தனர். இதனால் பொதுமக்கள் காத்திருக்க நேரிட்டது.

படிக்க வேண்டும்

spot_img