பாவேந்தர் பாரதிதாசன் 133-வது பிறந்தநாளை தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடும் வகையில், கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணிற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழனியப்பன், கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் ஜோதி உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, பாவேந்தர் பாரதிதாசன் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் பண்ணிருவர் நினைவுத்தூணிற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து தமிழ் வாழ்க, தமிழில் பேசுவோம், தமிழில் எழுதுவோம் என தமிழை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.