fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டி- கரூர் பரணி வித்யாலயா மீண்டும் சாம்பியன்

தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ போட்டி- கரூர் பரணி வித்யாலயா மீண்டும் சாம்பியன்

சென்னையில் நேற்று நிறைவு பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தென்னிந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டிகளில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி இந்த ஆண்டு 9 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் வென்று மொத்தம் 89 புள்ளிகளுடன், தொடர்ந்து 11வது முறையாக பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

இதன் மூலம் தென்னிந்திய சிபிஎஸ்இ ஜூடோ ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை 11வது முறையாக வென்று டெல்லியில் அடுத்த மாத இறுதியில் நடைபெறும் தேசிய போட்டிகளில் பங்கு பெற தேர்வாகி, கரூர் பரணி வித்யாலயா பள்ளி புதிய வரலாறு படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது.

இதில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் ஆன்டனி லார்ட்சன், தேவஸ்ரீ, ஸ்ரீனா, சுஜிதா, ராஜேஸ்வரி, சஹானா, பிரிதிவிராஜா, லிஷான் கெஸி, தன்யா தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். மனுஷ், தர்ஷன், அக்சயா, பூஜா, கவின், சஞ்சய், சுபஸ்ரீ, சர்வேஷ், அம்ரிதா, லலந்திகா, விகாஸ் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

வைசாலி, விகாஸ், யஸ்வந்த், ஹாசினி, கீர்த்தி நாச்சியார், லக்ஷன் ராகவேந்திரா, தரணீஷ், இன்ஃபென்ட் ஜெய், சச்சின், நந்திதா, தர்ஷித் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.

மொத்தமாக 9 தங்கப்பதக்கத்தையும், 11 வெள்ளிப்பதக்கத்தையும், 11 வெண்கல பதக்கத்தையும் வென்று ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றனர். இதன் மூலம் புள்ளிகளின் அடிப்படையில் 11வது முறையாக ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளனர்.

அண்மையில் கொங்கு சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில ஜூடோ போட்டிகளிலும் பரணி வித்யாலயா 43 தங்கப்பதக்கம், 47 வெள்ளிப் பதக்கம், 6 வெண்கல பதக்கம் வென்று மொத்தம் 96 பதக்கங்களுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 11வது முறையாக தென்னிந்திய ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்க்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு ஜுடோ சங்க மாநில துணைத் தலைவரும், பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான முனைவர்.சி.ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, பரணி ஜூடோ பயிற்சியாளர்கள், முத்துலட்சுமி, பார்த்திபன், ரம்யா, கார்த்திகேயன், பதக்க வேட்டையாடி தமிழகத்தை தொடர்ந்து தலைநிமிர வைத்த விளையாட்டு வீரர்களை பள்ளியின் தாளாளரும் மாவட்ட ஜூடோ சேர்மனும் ஆகிய மோகனரங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன், அறங்காவலர் வி.சுபாஷினி மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img