fbpx
Homeபிற செய்திகள்காரமடை அருகே சோதனையில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

காரமடை அருகே சோதனையில் ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் மக்களவைத்தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தேர்தல் ஆணையம் கடந்த 16ஆம் தேதியன்று அறிவித்தது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும், பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருள் விநியோகத்தை தடுக்கும் வகையில் சட்டமன்றத்தொகுதி வாரியாக 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காரமடை – தோலம்பாளையம் சாலையில் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ் வரி மற்றும் எஸ்ஐ சுரேந்திரன் தலைமை யிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியாக வந்த திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த கோவிந்தராஜ்(52) என்பவரின் காரை சோதனையிட்டதில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து ஐநூறு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து பறக்கும் படையினர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட வழங்கல் அலுவலருமான குணசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஒப்படைத்தனர். அப்போது, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img