மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவியுடன் அரங் கநாத பெருமாள் 4 ரத வீதிகளில் உலா வந்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை அரங்கநாதர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வைனவ திருத்தலமாகும். ஆண்டு தோறும் இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா நடை பெற்று வரும் நிலையில் இந்தாண்டு கடந்த 13 ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் துவங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஏகாதசி பெருவிழாவையொட்டி நாச்சியார் திருக்கோலம், மோகினி அவதாரம் உள்ளிட்ட பல்வேறு வழி பாடுகள் நடைபெற்ற நிலையில் இன்று அதி காலை 5.45 மணிக்கு ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூலவர் அரங்கநாத ருக்கு சிறப்பு பூஜைகள் நடத் தபட்ட நிலையில் அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் உற்ஷவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவியுடன் முன் மண்டபத்தில் எழுந்தருளிய நிலையில் பின்னர் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். தொடர்ந்து 4 ரக வீதிகள் வழியாக உலா வந்தார்.
இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஊர்கவுடர் முத்துசாமி, மிராசுதார்கள் ஜெகன்நாதன், ஆனந்த ராஜ் காரமடை நக ராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேவ்ஆனந்த், எம்.எம்.ராமசாமி, சுஜாதா, கார்த்தி கேயன், குணசேகரன், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத் தலைவர் விக்னேஷ், பொருளாளர் பிரபு, பொதுக்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ், தாச பளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கே.பி.கோவிந்தன், முன்னாள் திருப்பணி துணைத்தலைவர் ராஜேந் திரன், முன்னாள் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், திமுக நகர செயலாளர் வெங்கடேஷ், நகர காங்கிரஸ் நகர் தலைவர் துரை சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வரு கின்றனர். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
இதேபோல கோவை கோட்டை பெருமாள் கோவில் உள்ளிட்ட மாநகரம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களிலும் இன்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அதி காலையில் இருந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.