தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் காங்கயத்தில் வயல் மட்ட கள ஆய்வு மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த வயல் மட்ட கள ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வை தொடர்ந்து அமைச்சர் கூறுகையில்,
“தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக வேளாண்மைத்துறைக்கு தனி நிதிநிலையறிக்கை உள்ளிட்ட வேளாண் பெரு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களை செயல்படுத்தி வேளாண் துறையில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. தென்னை சாகுபடி குறித்து தொடர்ந்து களஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட்டுப்பாடு, உர மேலாண்மை குறித்த வயல் மட்ட கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின் போது, தென்னையில் நோய் தாக்குதல், பூச்சி கட் டுப்பாடு, உர மேலாண் மை போன்ற விவரங்கள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வெள்ளை ஈ தாக்குதல் குறித்தும், பூச்சி மருந்துகள் உபயோகம் தவிர்த்தல், மஞ்சள் நிற பாலீத்தின் தார்களை மரத் தின் தண்டுப்பகுதியில் 6 அடி உயரத்தில் கட்ட வேண்டும் அவை ஏக்கருக்கு 8 என்ற எண்ணிக்கையில் இருக்கவேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி கள ஆய்வு மேற் கொண்டனர். நீண்ட கால பயிரான தென்னை நோய் பாதிப்பு என்ற சூழ்நிலையை நீங்க வேண்டும் என்கிற வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்‘’ என்றார்.
இந்த ஆய்வின் போது, இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக ழகம் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் முனை வர்.ராஜமாணிக்கம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், துணை இயக்குநர் (தோட்டக் கலைத்துறை) சந்தரகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ண வேணி, உதவி இயக்குநர்கள், விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.