fbpx
Homeபிற செய்திகள்கருணாநிதி ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க்கபட்டது

கருணாநிதி ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க்கபட்டது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை தொகுதி பா. ஜ. க வேட்பாளரும் மத்திய இனை அமைச்சருமான எல். முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்

பின்னர் செய்தியாளர் களிடம் எல்.முருகன் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்தும் கருணாநிதி ஒப் புதலுடன் தான் தாரை வார்க்கபட்டுள்ளது. கச் சதீவு இலங்கைக்கு வழங்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்

அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க் கபட்டது. அது குறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்ககமளித்துள்ளார்.

இதனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடபடையால் சுட்டு கொல்லபட்டுள்ளனர். இதற்கு முழு காரணம் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது அதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற் றும் திமுக கூட்டணி அரசு தான் இதனால் இன்று வரை நமது தமிழக மீன வர்கள் பாதிப்படைந்து வருவதாகவும் எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சி தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பாஜக வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் பிரபு, துணை தலைவர் விக்னேஷ், மாவட்ட பொது செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், நகர தலைவர் உமாசங்கர், மத்திய அரசு தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராகவன் உள்பட கட் சியினர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img