fbpx
Homeபிற செய்திகள்தென்காசி மாவட்டத்தை உலகத் தரத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் வேட்புமனு தாக்கல் செய்த ஜான் பாண்டியன்...

தென்காசி மாவட்டத்தை உலகத் தரத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன் வேட்புமனு தாக்கல் செய்த ஜான் பாண்டியன் பேட்டி

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது:
கடந்த தேர்தலில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்ற பிறகு தென்காசி தொகுதி பக்கமே வரவில்லை என்ற போஸ்டர்கள் தென்காசி தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. அவ்வாறு இல்லாமல் நான் வெற்றி பெற்ற பின்பு தென்காசி தொகுதியிலேயே இருந்து தென்காசி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி தருவேன். தென்காசி தொகுதி மக்களின் குரலாக எனது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.

ஜாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து அனை த்து மக்களுக்கும் தொண்டாற்று வேன் என்று உறுதி அளித்த பிறகே நான் தென்காசி தொகுதிக்கு வேட்பாளராகி உள்ளேன்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல வெற்றி பெறுவது மட்டுமல்ல அதன் பிறகு தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் இதற்காகவே உங்களை தேர்ந்தெடுத்து உள்ளோம் என்று அவர் சொன்ன வாக்கு பொன்னாக வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களிலும் தமிழகத்தில் வெற்றி பெறும். மேலும் தென்காசி தொகுதியில் உலக தரம் வாய்ந்த தொழில்கள், ஐடி பார்க், சுற்றுலா தலம் ஆகியவற்றை கொண்டு வர பிரதமரிடம் வலியுறுத்தி தென்காசி தொகுதியை உலகத்தரம் வாய்ந்த முதன்மை தொகுதியாக மாற்றுவதற்கு பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, தொகுதி பார்வையாளர் மகாராஜன், பா.ம.க மாநில துணைத் தலைவர் திருமலை குமாரசாமி யாதவ், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் வினோத் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img