பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜேபிஎல் நிறுவனமானது ‘ஒவ்வொரு மனநிலைக்கும் துல்லியமான ஒலி’ என்ற நுகர்வோர் டிஜிட்டல் பிரசாரத்தையும், தீபாவளி சலுகையையும் அறிவித்துள்ளது.
50 நாட்களுக்கான பிரசாரத்தில், வாழ்வில் எந்த பகுதியில் இருந்தாலும், ஒவ்வொருவரின் தேவையையும் ஜேபிஎல் ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் (வெளி இரைச்சலை ரத்து செய்யும்) ஹெட்ஃபோன் எவ்வாறு பூர்த்தி செய்கிறது என்பதை விளக்குகிறது.
இதுகுறித்து ஹர்மன் இந்தியாவின் லைஃப்ஸ்டைல் பிரிவின் துணைத் தலைவர் விக்ரம் கெர் கூறியதாவது: நாம் ஒளி உற்சவத்தை கொண்டாடும் சமயத்தில், இசை மற்றும் தொழில்நுட்பத்தின் பெரும் சக்தி மூலம் இதயங்களையும் வீடுகளையும் ஒளிரச் செய்வது ஜேபிஎல்-க்கு மிக பெருமையாக உள்ளது.
தீபாவளி உணர்வோடு கலந்து எதிரொலிக்கும் புதுமையான அனுபவங்கள் மூலம் இந்த மகிழ்ச்சியானது, அனைவரின் வாழ்விலும் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் வாழ்க்கையின் இனிமையான இசையால் நிரப்ப வேண்டும் என்பதை தீபாவளி வாழ்த்தாக கூறுகிறோம்.
கூடுதலாக, ஜேபிஎல் தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் உள்ள முக்கிய விமான நிலைய முனையங்களில் ‘மியூட் தி வர்ல்ட் வித் பர்ஃபக்ட் சவுன்ட்’ அதாவது ‘‘துல்லியமான ஒலி மூலம் உலகத்தை மற’’ எனும் பிரசாரத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த தீபாவளி சீசனில் அனைவரும் ஜேபிஎல்-ன் சிறந்த ஒலியின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிசெய்வதற்காக, நம்பமுடியாத கேஷ்பேக் சலுகைகள் அக். 1 முதல் நவ. 20 வரை கிடைக்கும் என்றார்.