கோவை விழாவுக்கான தேதியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப்குமார் ஆகியோர் அறிவித்து லோகோ-வை வெளியிட்டனர்.
கோவையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கோவை விழா கொண்டாடப்படுகிறது.
கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விதமான கண்கவர் நிகழ்ச்சிகள் இந்த கோவை விழாவில் நடை பெறும். கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யெங் இந்தியன்ஸ் அமைப்பினர் இணைந்து இதுவரை 14 ஆண்டுகள் கோவை விழாவை நடத்தியுள்ள நிலையில் 15வது கோவை விழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
ஜனவரி மாதம் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை விழா நடைபெற உள்ளது. இதற்கான தேதி அறிவிப்பு நிகழ்ச்சி வாலாங்குளம் கரையில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இணைந்து கோவை விழாவிற்கான தேதி மற்றும் லோகோ-வை அறிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது:கோவை கடந்த 1804ம் ஆண்டு மாவட்ட அந்தஸ்து பெற்று படிப்படியாக மிகப்பெரிய மாநக ராக வளர்ந்துள்ளது. கோவையின் பிறந்த நாளிலேயே கோவை விழா குறித்தான அறிவிப்பு நடப்பது சிறப்பாக உள்ளது.
கோவை விழாவில் ‘லோகோ வில்’ உள்ள மரகதப்புறா
கோவை விழாவில் ‘லோகோ வில்’ உள்ள மரகதப்புறா கடந்தாண்டு மாஸ்க் அணிந்திருந்தது. இந்தாண்டு மாஸ்க் அணியவில்லை. இந்தாண்டு மரகதப்புறா கோவை முழுக்க சுற்றிப்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கலாச்சாரம், சமதர்மம், மாரத் தான், கலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கோவை விழாவில் இடம் பெற்று வருகிறது.
கோவையின் சிறப்பு வேறு எந்த நகரிலும் இல்லை. எல்லோரும் கிராமத்தில் இருந்து வந்திருப்பீர் கள்.
நானும் கிராமத்தில் தான் பிறந்தேன். நகரத்தில் திருவிழா கொண்டாடப்படுவதை கேள்விப்பட்டதில்லை. ஆனால், கோவையில் கிராமத்தில் நடப்பதை போல் கடந்த 14 ஆண்டாக திருவிழா நடைபெற்று வருகிறது. இது நாட்டில் அரிதான ஒன்றாக உள்ளது. இதற்காக நாம் கின்னஸ் சாதனைக்கு முயற்சிக்கலாம்.
திருவிழாவின் அனைத்து அம்சங்களும் கோவை விழாவில் உள்ளது. நாட்டில் மிகச்சிறந்த ஒரு திருவிழாவாக உள்ளது. இந்தாண்டு புதிய நிகழ்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் குமார் பேசுகையில், “கோவையின் அனைத்து பகுதிகளிலும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது நடைபெறும் விதமாக கோவை விழா நடத்தப்பட வேண்டும்.
வாரம் ஒருமுறை விழா ஒருங்கிணைப்பாளர்களை சந்திக்க உள்ளேன். மக்களிடமும் கருத்துக்கள் கேட்கலாம். எனவே நமக்கு தெரியாத விஷயங்களை கோவை விழாவில் நடைமுறைப் படுத்தமுடியும்.” என்றார்.