ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஜமுனாமரத்தூரில் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது பழுதடைந்து இருக்கிறது.
புதிய ஊராட்சி மன்ற அலுவலகம்
எனவே புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்றம் அலுவலகம் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.
இதற்கான பூமி பூஜை விழாவுக்கு கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் நடேசன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல், பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் ஜவ்வாதுமலை ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜீவா மூர்த்தி, துணைத்தலைவர் தேவராஜ் லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளையன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.