நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக் காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான அருணா நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிதழை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதில், உதகை நகராட்சிக்குட்பட்ட கீழ் லட்சுமிநாராயணபுரம் பகுதியில், நேரில் பார்வையிட்டு, வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுக்களை வழங்கினார்.
இதன் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவினை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலரும், ஆவின் பொது மேலாளருமான மரு.ஜெயராமன், உதகை வட்டாட்சியர் சரவண குமார் உட்பட பலர் உட னிருந்தனர்.