கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவராக டேனிசிங், மாவட்ட செயலாளராக சார்லஸ் ஆண்டனி ஆகியோர் நியமிக்கபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர்,மாநில முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறோம் அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணிக்கு ஆதரவை தெரிவிப்பதாகவும் தமிழகத்தை பொறுத்தவரை திமுகவிற்கு முழு ஆதரவை கொடுப்பதாக தெரிவித்த அவர் பாஜகவின் ஊழல் மற்றும் மதவாத சக்தியை அளிக்க இந்த கூட்டணிகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர்,தேர்தல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க நிரந்த எண்களை உருவாக்க வேண்டும் எனவும் வாக்கு செலுத்திய பின்பு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டு எண்ணபட வேண்டும் என தெரிவித்தார் .
மக்கள் பிரதிநிதி என்ற திட்டத்தின் மூலம் கோவையில் உள்ள 100 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது என முடிவெடுக்கப்பட்டது . கோவைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் டோனிசிங் கோவைமாவட்ட செயலாளர் சார்லஸ் ஆண்டனி கவுண்டம்பாளையம் பொறுப்பாளர்கள் சாகுல் சண்முக சுந்தரம் சைமன், மற்றும் ஐடி விங் பொறுப்பாளர் லோகேஸ், கொள்கைபரப்பு செயலாளர் ரமேஸ் , தொண்டாமுத்தூர் பொறுப்பாளர் பாண்டியன், இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மிக்கி, பாலாசிங் மற்றும் திரைபட நடிகர் சங்க பொறுப்பாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் குமார், இணை செயலாளர் சிவசங்கர், பொறுப்பாளர் ஹரிநாயுடு மற்றும் பல்லடம் பொறுப்பாளர் மணிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.