fbpx
Homeபிற செய்திகள்நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட வயது வந்தோருக்கான தடுப்பூசி அறிமுகம்

நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட வயது வந்தோருக்கான தடுப்பூசி அறிமுகம்

ஃபைசர் இந்தியா இன்று கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையுடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது.

இவர்கள் நாள்பட்ட நோய்களான நுரையீரல் நோய், இதய நோய், சிறு நீரகநோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற கோளாறுகளைக் கொண்ட 50 வயதுக்கு மேற்பட் டவர்கள் பெரும்பாலும் VPDகளின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை சுட்டிக்காட்டி தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ராயல் கேர் மருத்துவ இயக்குநர் பரந்தாமன் சேது பதியால் CoE திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, அறிவியல் உச்சி மாநாடு நடத்தப்பட்டது.
இண்டர்வென்ஷனல் நுரையீரல் ஆலோசகர் பட்டாபிராமன் போன்றோர் தலைமை தாங்கினர். இண்டர்வென்ஷனல் நுரையீரல் ஆலோசகர் அர்ஜுன் சீனிவாசன் மற்றும் ராயல்கேர் மருத்துவமனையின் தொற்று நோய்கள் ஆலோசகர் ஏ.எஸ்.நவீன் ஆகியோருடனான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதில் நிமோகாக்கல் தடுப்பூசியின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து ராயல் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.மாதேஸ்வரன், ஃபைசர் தடுப்பூசிகளின் மருத்துவவிவகார இயக்குநர் சந்தோஷ்தார் ஆகியோர் தடுப்பூசியின் நன்மை குறித்து பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img