100 வருட பாரம்பரியம் கொண்ட பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் பிராண்டான எம்ஜி (Morris Garages) இன்று இந்தியாவில் எம்ஜி ஹெக்டரின் பிளாக்ஸ்டாம் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டாம் ஆனது ஸ்டார்ரி- பிளாக் நிற வெளிப்புறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் இன்டர்நெட் எஸ்யூவியின் தன்மையை வெளிப்படுத்தும் கன்மெட்டலுடன் கூடிய கருப்பு நிற கருப்பொருள் உட்புறங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல தொழில்நுட்பம் மற்றும் இணைக்கப்பட்ட அம்சங்களுடன், அதன் தனித்துவமான தோற்றத்துடன் எஸ்யூவி வாங்குபவர்களுக்கு ஆற்றல் மற்றும் ஆடம்பரத்தை வழங்குகிறது. சிறந்த-பிரிவு சலுகைகள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு கூறுகளுடன், ஹெக்டர் பிளாக்ஸ்டாம் பதிப்பு 5, 6 மற்றும் 7 இருக்கை கட்டமைப்புகளில் கிடைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய 35.56 செ.மீ. (14-அங்குலம்) எச்டி இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 75+ இணைக்கப்பட்ட கார் அம்சங்களுடன் வருகிறது.
ஓட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு அம்சங்கள் இந்த புதிய அறிமுகத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எம்ஜி ஹெக்டர் பிளாக்ஸ்டார்ம் ரூ. 21.24 லட்சம் அறிமுக விலையில் சந்தைக்கு வந்துள்ளது.