கேஎம்சிஹெச் மருத்துவமனை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகமும் இணைந்து சாலை விபத்தில் உடனடி சிகிச்சை முறை பற்றிய சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.
கோவையைச் சேர்ந்த முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் விபத்து மற்றும் அவசரகால மருத்துவ சேவைகள் அளிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்று என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
தற்போது ட்ராமா சிம்போசியம் 2024 என்ற பெயரில் மார்ச் 10-ம் தேதி ஒரு சர்வதேச கருத்தரங்கை நடத்தியுள்ளது. வெளிநாட்டு நிபுணர்களின் அதிநவீன அறுவை சிகிச்சை நுட்பங்களை நமது நாட்டு மருத்துவர்களும் அறிந்துகொண்டு பலன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் விபத்தால் உயிரிழந்தும் உடல் சேதங்கள் அடைந்தும் வருவதாக
உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
விபத்தினால் ஏற்படும் பல்வேறு வகையான உடல் சேதங்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் அவற்றுக்கான வழிகாட்டுதல்கள் அளிப்பதற்காகவும் அடல்ட் ட்ராமா லைப் சப்போர்ட் (ATLS) என்ற பயிற்சித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கின்போது அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியரும் அறுவை சிகிக்சைத் துறை இயக்குனருமான டாக்டர் கிருஷ்ணன் ராகவேந்திரன் மற்றும் அவரது குழுவினர் அவசரகால சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் பற்றி உரைகள் நிகழ்த்தி தங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்தும் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
இதில் பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவர்களும் அறுவை சிகிச்சை நிபுணர்களும் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.