fbpx
Homeபிற செய்திகள்ஓமன் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்து சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய சர்வதேச கருத்தரங்கம்

ஓமன் மஸ்கட் கல்லூரியுடன் இணைந்து சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய சர்வதேச கருத்தரங்கம்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஒமன் மஸ்கட் கல்லூரியும் இணைந்து அகில இந்திய அளவில் சர்வதேச கருத்தரங்கம் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கான கிரீன் கம்ப்யூட்டிங், மேலாண்மையில் புதுமையான மற்றும் நிலையான வளர்ச்சி, ஆங்கில மொழி இலக்கியம் மற்றும் மொழியியல் என்ற தலைப்புகளில் அகில இந்திய சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகுவள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற துவக்க விழாவில், சோனா கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று அகில இந்திய சர்வதேச கருத்தரங்கின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். பின்னர் கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர்கள், சிறப்புவிருந்தினர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சர்வதேச கருத்தரங்கினை துவக்கிவைத்தனர்.

இந்த நிகழ்வில் மஸ்கட் கல்லூரியின் பேராசிரியர் ஸ்டீபன் ஆரோ கார்டன், பேராசிரியர் ஃபெர்டி குரோஸ், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் தனவேல், அமிட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுஜாதா கண்டாய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள்.

அவர்கள் பேசும்பொழுது இந்த அகில இந்திய கருத்தரங்கத்தை சோனா கல்லூரியுடன் இணைந்து நடத்தியதில் தாங்கள் பெருமையடைவதாக தெரிவித்தனர், மேலும் இதுபோன்ற அகில இந்திய அளவில் கருத்தரங்குகளை நடத்துவது போன்று இன்னும் பல துறைகளில் சிறந்து விளங்குவதால் தான் சோனா தொழில்நுட்பக் கல்லூரி அகில இந்திய அளவில் தனித்துவத்துடன் திகழ்ந்து வருகிறது என்றும் இதற்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் கல்லூரியின் நிர்வாகத்தினரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வில் சோனா கல்வி குழுமத்தின் முதல்வர்கள் வீ.கார்த்திகேயன், ஜீ.எம்.காதர்நவாஷ் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இறுதியாக சோனா கல்லூரியின் அட்மிஷன் டீன் மற்றும் துறைத்தலைவர் சத்தியபாமா நன்றியுரையாற்றினார்.

படிக்க வேண்டும்

spot_img