fbpx
Homeபிற செய்திகள்நந்தா பொறியியல் கல்லூரிக்கு சர்வதேச விருது

நந்தா பொறியியல் கல்லூரிக்கு சர்வதேச விருது

நந்தா பொறியியல் கல்லூரியின் கட்டுமான பொறி யியல் துறையில் 2017 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கான்கிரீட் நிறுவனத்தின் மாணவர் பிரிவு செயல்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், அமெரிக்க கான்கிரீட் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளின் மூலம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் சுமார் 57 பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. நந்தா கல்லூரி நான்காவது முறையாக இந்த விருதினைப் பெற்றது.

மாணவர்கள் எஸ்.பிரேம்குமார், ஜே. ரித்திகா, எம். யோகேஸ்வரி ஆகியோர் விருது மற்றும் ரூ 45,000 ரொக்கப் பரிசு பெற்றனர்.

அவர்களுக்கு கல்லூரி முதல்வர் யு.எஸ். ரகுபதி, புலமுதல்வர் ஈ.கே. மோகன்ராஜ், உதவி பேராசிரியர் திரு. சி.யு. மணிகண்டன், கல்லூரி தலைவர் வி.சண்முகன், செயலர்கள் எஸ். நந்தகுமார் பிரதிப், எஸ். திருமூர்த்தி, பாராட்டுகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img