தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 23-ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் வேகம் எடுத்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான க.தர்ப்பகராஜ் தலைமையில், மாவட்ட ஆட் சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தேர்தலில் வாக்காளர் கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசி யத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள், பீனிக்ஸ் ரோலர் போர்ஸ் அகாடமி மற்றும் வீகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்கள் சிலம்பம், கராத்தே மற்றும் வில் வித்தை போன்ற வீர விளையாட்டுகளை நிகழ்த்தி பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, “என் வாக்கு என் உரிமை”, “உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்“, “100 சத வீதம் நேர்மையாக வாக்களிப்போம்“ போன்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் முழக்கமிட்டனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கல்லூரி மாணவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கலைக்குழுக்கள் மூலம் பேரணிகள் மற்றும் மனிதச் சங்கிலி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விளையாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிகழ்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட் டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



