கோவை பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் 34 டிகிரிக்கும் அதிகரித்துள்ளதால் இதனால் தர்பூசணி பழ விற்பனை சூடு பிடித்துள்ளது.
மொத்த விற்பனை மண்டிகளில் தர்பூசணி பழங்கள் தினமும் ஒரு டன் வரை விற்பனையாகிறது. கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து கோவையில் தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது. கோவையில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகமாக தர்பூசணி பழ மொத்த விற்பனை கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பெங்களூர் திண்டிவனம், விழுப்புரம் உள் ளிட்ட பல பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் தர்ப்பூ சணி பழங்கள் கொண்டு வரப்பட்டு மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘இங்குள்ள மொத்த வியாபார கடைகளில் தினமும் தலா ஒரு கடையில் சுமார் ஒரு டன் வரை தர்பூசணி விற்பனையாகிறது. மொத்த விற்பனையாக கிலோ ரூ.20க்கும் சில்லரை விற்பனை ரூ.25 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உள்ளூர் பகுதி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்” என்றனர்.தர்பூசணி விற்பனை சூடுபிடித்தது



