சமீப காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது போக்சோ என்கிற வலுவான சட்டப்பிரிவு பாய்கிறது. குற்றவாளிகளுக்கு 20, 30 ஆண்டுகள் சிறை தண்டனை கூட விதிக்கப்படுகிறது. ஆனாலும் இந்த வகை குற்றங்கள் குறைவதற்குப் பதிலாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இந்தியாவில், 2021-ம் ஆண்டில் 31,677 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சராசரியாக தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்ப டுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கு 49 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் பெண்க ளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 15.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.
இந்த புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் மீது நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வரும் ஆண்டுகளிலாவது குற்றங்கள் குறையட்டும்!